பிஷ்கெக்: கஜகஸ்தானில் ஆசிய ‘சீனியர்’ மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான ‘பிரீஸ்டைல்’ பிரிவில் போட்டிகள் நடந்தன. 53 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மீனாக் ஷி, தென் கொரியாவின் சியோயங் பார்க்கை எதிர்கொண்டார். இதில் மீனாக் ஷி, 4-2 என்ற கணக்கில் ‘திரில்’ வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.
55 கிலோ பிரிவில் இந்தியாவின் ஹன்சிகா லம்பா, 6-1 என கிர்கிஸ்தானின் அரூகியை வீழ்த்தி, வெண்கலம் கைப்பற்றினார். 59 கிலோ பிரிவில் இந்தியாவின் நேஹா, 10-4 என்ற கணக்கில் மல்கோலியாவின் போலார்டுயாவை சாய்த்து, வெண்கலம் வசப்படுத்தினார். 72 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஹர்ஷிதா, 6-5 என கஜகஸ்தானின் ஜமிலாவை வீழ்த்தினார். அரையிறுதியில் ஜப்பானின் மஹிரோவிடம் தோல்வியடைந்தார். இதுவரை இத்தொடரில் இந்தியா 2 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கம் வென்றுள்ளது.
