தமிகழகம் முழுவதும் மழை நீர் சேமிப்பை அதிகரிக்கவும், தொடர்ந்து அதனை முன்னெடுக்கவும் அரசு சார்பில் புதிய ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்து காண்போம்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு மிக முக்கியமான ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புதுப்பித்து, அதை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக (Mass Movement) மாற்ற உத்தரவு. இந்த உத்தரவை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி* பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஆணை
G.O.No.158-ன் படி மழைநீர் சேகரிப்பில் முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது. இப்போ 24 வருஷம் கழிச்சு, பல இடங்களில் அந்த கட்டமைப்புகள் பழுதடைந்து, தூர்பிடித்து, செயல்படாமல் இருப்பதால், அவற்றை சீரமைக்க தற்போதைய தவெக அரசு முடிவெடுத்து உள்ளது. அதற்காக புதிய அறிவிப்பை இன்று அரசு வெளிட்டுள்ளது.
அரசு முன்னெடுக்கும் பிரச்சாரம்
IMPLEMENTATION OF RAIN WATER HARVESTING AS A MASS MOVEMENT – RENEWED INITIATIVES, அதாவது மழைநீர் சேகரிப்பை ஒரு மக்கள் இயக்கமாக செயல்படுத்துதல்.
திட்டத்தின் நான்கு முக்கிய நோக்கங்கள்
பழைய கட்டமைப்புகளை சீர் செய்தல்: அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் உள்ள பழைய மழைநீர் தொட்டிகளை ஆய்வு செய்து, சுத்தம் செய்து, தூர்வாரி, உடைந்ததை சரி செய்தல். புதிய கட்டமைப்புகளை உருவாக்குதல்: Roof Top Harvesting மற்றும் Ground Water Recharge அகியவவை, அதாவது வீட்டின் கூரை மற்றும் மாடிகளில் விழும் மழைய நீரை சேமிப்பது புதிய கட்டிடங்களுக்கு மட்டுமல்லாது, இனி பழைய கட்டிடங்களுக்கும் கட்டாயமாக்கப்படுகிறது. விழிப்புணர்வு: மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதை மக்களின் சொந்த பொறுப்பாக மாற்றுவது. கண்காணிப்பு: தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைத்து தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும்.இதற்காக வடகிழக்கு பருவமழைக்கு முன் மாநிலம் தழுவிய பருவமழைக்கு முந்தைய பிரச்சாரம் நடத்தப்படும்
இனி நடக்க இருக்கும் பணிகள்
அனைத்து அரசு கட்டிடங்களிலும் மழைநீர் கட்டமைப்புகள் முழுமையாக செயல்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்படும். மொட்டை மாடி, கால்வாய்கள், வடிகட்டும் அறைகள், செறிவூட்டும் குழிகள் சுத்தம் செய்யப்படும். சாலைகள், பொது இடங்களில் இருந்து வரும் மழைநீரை சேமிக்க Recharge Trenches, Recharge Shafts, Percolation Pits அமைக்கப்படும். புதிய குடிநீர் திட்டங்களில் மழைநீர் சேகரிப்பு ஒரு பகுதியாகவே இருக்கும். மக்களுக்ளுக்கான விழிப்புணர்வு தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள், சமூக வலைதளங்கள், சுவர் ஓவியங்கள், பேருந்து மூலம் விளம்பரம் செய்தல். தெருமுனை பிரச்சாரம், குறும்படங்கள், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு மழை நீர் சேமிப்பு குறித்து பயிற்சி நடத்துதல். சுய உதவிக்குழுக்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மூலம் கிராமங்களில் வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளுதல்.
அரசு வழங்கும் விருதுகள்
இத்திட்டத்தை முறையாகபும் சிறப்பாகாவும் செயல்படுபத்துவர்களுக்கு அரசு சார்பில் விருது வழங்கப்படும்.
சிறந்த மாவட்டம் சிறந்த நகராட்சி / ஊராட்சி சிறந்த பள்ளி / கல்லூரி சிறந்த அரசு அலுவலகம் சிறந்த குடியிருப்போர் சங்கம்
முதல்வர் விஜய்யின் இலக்கு
நிலத்தடி நீர்மட்டத்தை கண்காணித்து, எங்கு தண்ணீர் அதிகரித்துள்ளது என்று புகைப்படத்துடன் ஆதாரம் வைக்கவும் அரசு உத்தரவுட்டுள்ளது. இனி மழைநீர் சேகரிப்பு என்பது வெறும் மழைக் காலத்திற்கான வேலை மாட்டும் அல்ல, அது ஒரு தொடர் மக்கள் இயக்கமாக உருவாக்கி, வீட்டுக்கு ஒரு மழைநீர் தொட்டி கட்டாயம் என்ற நிலையை கொண்டு வருவதே தற்போதைய தமிழ்நாடு முதல்வர் விஜய் அரசின் இலக்காக நிர்ணயக்கப்பட்டுள்ளது.
Source link
