தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 15-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. வரும் டிசம்பர் 31 வரை இந்த ஆண்டு பருவமழை கொட்டி தீர்க்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் பெய்த அதிகனமழையை தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் திறம்பட மேற்கொள்ளப்பட்டன.இரவு முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கமின்றி சீரான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.இதற்கு கடந்த திமுக ஆட்சியில் மேற்க்கொள்ளப்பட்ட திட்டங்கள் தான் காரணம் என்று திமுகவினர் கூறிவருகின்றனர்.
இந்த விமர்சனத்திற்கு மதிமுக எம்.பி.துரை வைகோ விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த திமுக ஆட்சியில் சுமார் 4,000 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அவை முழுமையான மற்றும் சரியான முறையில் ஒருங்கிணைக்கப்படவில்லை என்பதே உண்மை” என்றார்.
உதாரணத்திற்கு, சுமார் 24 கிலோமீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் வெட்டப்பட்டிருந்தாலும், அவற்றை மற்ற பிரதான கால்வாய்களுடன் இணைக்கும் பணிகள் முழுமையாகச் செய்யப்படவில்லை. இதனால் சில இடங்களில் வடிகால் நீர் நின்றுகொள்ளும் நிலை ஏற்படுகிறது என்று கூறினார்.
