மழை நிலவரம் என்ன?: 10 நாட்களாக பதில் சொல்லாத தமிழக அரசு – மக்கள் பாதுகாப்பில் அலட்சியம்? – tn govt fails submit daily situation reports to ndma icr er for 10 days oct 16 to oct 26

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு கடந்த 10 நாட்களாக மழை பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை அளிக்கவில்லை என கூறப்படுகிறது. கடைசியாக அக்டோபர் 15 ஆம் தேதி தகவல் அளித்துள்ள தமிழ்நாடு அரசு, அதன் பின்னர் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் அக்டோபர் 26 வரை அறிக்கை அளிக்காத மாநிலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு கடந்த 10 நாட்களாக மழை பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை அளிக்கவில்லை என கூறப்படுகிறது. எந்த பாதிப்பும் இல்லாத மாநிலங்கள் கூட தினசரி அறிக்கை அளித்து வரும் நிலையில், சென்னையி 36 செ.மீ மழை, பர்லியார் மண் சரிவு குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை அளித்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய இணையதளத்தில் தகவல் இல்லை. கடைசியாக அக்டோபர் 15 ஆம் தேதி தகவல் அளித்துள்ள தமிழ்நாடு அரசு. அதன் பின்னர் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் அக்டோபர் 26 வரை அறிக்கை அளிக்காத மாநிலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

தினசரி அறிக்கை அறிக்கை வெளியீடு

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தினசரி அறிக்கை வெளியிடப்ப்படும். அந்த அறிக்கையில், மாநில அரசுக்கள் மற்றும் யூனியன் பிரேதசங்கள் சார்பில் அளிக்கப்படும் தகவல் கொண்டு, மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் குறித்த எச்சரிக்கை மற்றும் பாதிப்புகள் இடம்பெறும். மேலும் இந்தியவில் பதிவாகியுள்ள மழை, காற்று, கடல் சீற்றம் போன்ற தலவகள் மற்றும் எச்சரிக்கைகளும் அந்த அறிக்கையில் இடம்பெறும்.

அறிக்கை அளிக்காத தமிழக அரசு

இந்த சூழலில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, தமிகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையி 36 செ.மீ மழை, பர்லியார் மண் சரிவு குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை அளித்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய இணையதளத்தில் தகவல் இல்லை. கடைசியாக அக்டோபர் 15 ஆம் தேதி தகவல் அளித்துள்ள தமிழ்நாடு அரசு. அதன் பின்னர் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் அக்டோபர் 26 வரை அறிக்கை அளிக்காத மாநிலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ஏற்படும் பாதிப்பு என்ன?

ஒரு மாநிலத்தில் பேரிடர் காலங்களில் என்ன நடக்கிறது? தற்போதைய பாதிப்பு என்ன? என்பதை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் முதன்மை ஆவணமாக இந்த தினசரி சூழ்நிலை அறிக்கை உள்ளது. இப்படியா சூழலில் இந்த அறிக்கை இல்லாத போது, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தல், தமிழகத்தின் தற்போதைய கள நிலவரத்தை துல்லியமாக அறிந்து கொள்ள முடியாமல் போகும். தமிழகத்தில் எங்கு அதிக பாதிப்பு உள்ளது? எந்த மாவட்டங்களுக்கு கூடுதல் மீட்பு படைகள் தேவை? என்பதை இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே மத்திய உள்துறை அமைச்சகமும் தேசிய பேரிடர் மீட்பு படையும் தீர்மானிக்கும் எனவும் கூறப்படுகிறது. மாநில அரசு, அறிக்கை அளிக்க தவறினால், இக்காட்டான அவசரக் காலங்களில் கூடுதல் படைகளை உடனடியாக அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். இதனால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் ஆபாயம் உள்ளது.

தவெக அரசின் அலட்சியமா?

இந்த மிக முக்கிய அறிக்கையை தவெக அரசு வழங்காதது, அரசின் அலட்சிய போக்கை காட்டுவதாக உள்ளதாகவும், மக்கள் குறித்தும், அவர்களது பாதுகாப்பு குறித்து சந்தேக கேள்வி எழுப்பியுள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பெரும் பாதிப்புகள் ஏற்படும் எனவும் அவர்கள் குற்றம் சாட்டுகிறனர்.
தேசிய பேரிடர் ஆணையத்தின் சார்பில் வெளிடப்படும் அறிக்கையில் பல முக்கிய தகவல்கள் இடம்பெறும். அதில் மாநிலங்கள் வாரியாக பாதிப்புகள் மற்றும் பணிகள், இயற்கை சீற்றங்கள் குறித்த தகவல்கள் உள்ளன.

மழைப்பொழிவு மற்றும் வானிலை முன்னறிவிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கான கனமழை எச்சரிக்கை. 26, 27, 28 அக்டோபர் தேதிகளுக்கான மழை முன்னறிவிப்புகள்.

புயல் மற்றும் காற்று தொடர்பான தகவல்கள்

வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் வானிலை அமைப்புகள். புயல் உருவாகும் வாய்ப்பு மற்றும் அதன் நகர்வு. பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசுவதற்கான முன்னறிவிப்புகள்.

கடலோரப் பகுதிகளுக்கான எச்சரிக்கைகள்

கடல் சீற்றம் மற்றும் அலைகள் தொடர்பான தகவல்கள். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படும் பகுதிகள். கடலோர மாவட்டங்களுக்கான முன்னெச்சரிக்கைகள்.

நிலநடுக்கம் தொடர்பான தகவல்கள்

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான நிலநடுக்கம். நிலநடுக்கம் ஏற்பட்ட இடம், நேரம், ஆழம் மற்றும் ரிக்டர் அளவு.

பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள்

மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகளின் செயல்பாடுகள். மீட்புப் படைகள் அனுப்பப்பட்ட மாநிலங்கள் மற்றும் குழுக்களின் எண்ணிக்கை.

காட்டுத்தீ மற்றும் பிற பேரிடர் எச்சரிக்கைகள்

காட்டுத்தீ தொடர்பான எச்சரிக்கைகள். பிற இயற்கைப் பேரிடர்கள் மற்றும் அவசரநிலை நிகழ்வுகள் குறித்த அறிக்கைகள்.

மத்திய நீர் ஆணையத்தின் வெள்ள எச்சரிக்கை

வெள்ள அபாய நிலை தொடர்பான தகவல்கள். எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நீர்நிலை கண்காணிப்பு.

மாநில வாரியான NDRF படைகள் விவரம்

எந்தெந்த மாநிலங்களில் பேரிடர் மீட்புப் படைகள் உள்ளன? ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள குழுக்களின் எண்ணிக்கை.

Source link