கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனையும் நடந்து வருகிறது. வைப்பு நிதியை பயன்படுத்தும் திட்டம் இல்லை என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த ஓராண்டாக இந்த கோயிலுக்கு அறங்காவலர்களை நியமிப்பதில் தாமதம் ஏன் என கேள்வி எழுப்பினர்.
பின்னர் அறங்காவலர்கள் நியமனத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றும், கோயில் நிரந்தர வைப்பு நிதியை பயன்படுத்தும் முன்பாக சட்ட விதிகளை கண்டிப்பான முறையில் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
