கிராமபுற ஏழை மாணவர்களுக்கு எதிரான, நீட் தேர்வு முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் பாமகவின் கருத்து என சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
பசுமைத்தாயகம் நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மேடவாக்கத்தில் நடைபெற்றது.இதில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவரும், பாமக சட்டமன்ற உறுப்பினருமான சௌமியா அன்புமணி கலந்து கொண்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கியும்
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், அரசு பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, அரசுப் பள்ளிக்கு எக் போர்டுகள், மாணவ மாணவிகளுக்கு தட்டுகள், மாற்றுத்திறனாளிக்கு நாற்காலிகள் வழங்கியும், தூய்மை பணியாளர்களுக்கு அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் சௌமியா அன்புமணி வழங்கினார். பின்னர் அவரது பிறந்தநாளில் மாற்றுத்றனாளிகளுடன் செலஃபீ எடுத்துக் கொண்டும் அனைவரிடமும் வாழ்த்துக்களை பெற்றார்.
சத்தமில்லாமல் சம்பவம் செய்யும் தவெக….கோட்டை விடும் அதிமுக?
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி, நீட் தேர்வு கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நுழைவுத் தேர்வாக இருப்பதாகக் கூறினார்.
மாணவர்களுக்கு சம வாய்ப்பு கிடைக்காத நிலை
மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு சம வாய்ப்பு கிடைக்காத நிலை இருப்பதாகவும், நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களும் சில சூழல்களில் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால், திறமையான மாணவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்றார்.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று சௌமியா அன்புமணி வலியுறுத்தினார். ஒரு மாணவர் தனது திறமையை மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், பள்ளிப் பொதுத்தேர்வில் சிறப்பாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு நேரடியாக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்
தற்போதைய நீட் முறை காரணமாக மாணவர்கள் தொடர்ந்து தேர்வுக்காகவே படித்து மன அழுத்தத்திற்கு ஆளாகும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் கவலை தெரிவித்தார்.டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை குறிப்பிட்ட அவர், அமைதியாக போராடும் மாணவர்கள் மீது போலீசார் வன்முறை அல்லது அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று வலியுறுத்தினார்.
மேலும், மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தல் அல்லது கைது நடவடிக்கை மேற்கொள்வது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றும், வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டு கல்வி, வேலை வாய்ப்புகள் போன்றவற்றிலும் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.அதேபோல், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் உரிய அங்கீகாரம் மற்றும் தேவையான சலுகைகள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்றும் சௌமியா அன்புமணி வலியுறுத்தினார்.
Source link
