மாணவர்களை மிரட்டும் வகையில் பேச்சு: சிங்கப்பெண் அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மாற்றம்

அரியலூர்,

விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழக முதல்-அமைச்சர் விஜய் அறி வித்த திட்டங்களில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டமும் ஒன்றாகும். அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் உட்கோட்டங்களில் தலா 4 போலீசார் கொண்ட 2 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. இதில் அரியலூர் உட்கோட்ட படையில் சிறப்பு பாதுகாப்பு அலுவலராக பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் சுமதி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

போக்சோ சட்டம்….

அப்போது அங்குள்ள மாணவர்களிடம் ’18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந் தைகளிடம் யார் பேசினாலும், ஹாய் என குறுஞ்செய்தி அனுப்பினாலோ அல்லது அவர்களிடம் அசிங்கமாகவோ, அருவருப்பாகவோ பேசினால் போக்சோ சட்டத்தின்கீழ் சிறைக்கு செல்வீர்கள்’ என்று மாணவர்களை மிரட்டும் வகையில் அவர் பேசியதாக தெரிகிறது. மேலும் இதனை அவரே வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதனை பார்த்த பொதுமக்கள் பலரும், ’18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளிடம் பேசினாலே சிறைக்கு செல்வீர்’ என பேசியது தவறு என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலான நிலையில், சுமதியை அரியலூர் சட்டம்-ஒழுங்கு போலீஸ் பிரிவுக்கு மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டார்.

Source link