மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கொச்சியிலிருந்து சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்க தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பதாகைகளுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார் ?
செய்தியாளர்களிடம் பேசிய கே.சி. வேணுகோபால், டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய நடவடிக்கை குறித்து கடுமையாக விமர்சித்தார்.
“மாணவர்கள் மற்றும் பெண் மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்? அந்தச் சம்பவங்களுக்கு யார் பொறுப்பு? இந்த கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் அமித்ஷாவை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
நீட் போராட்ட மாணவர்களுக்கு பாராட்டு
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களின் உறுதியான போராட்டத்தை கே.சி. வேணுகோபால் பாராட்டினார்.
மாணவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதாகக் கூறிய அவர், அதற்காக போராடிய மாணவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் வாழ்த்து தெரிவித்தார்.
மாணவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்
நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு முழுப் பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் வரை காங்கிரஸ் கட்சி அவர்களுடன் உறுதியாக நிற்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் தொடரும்
நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர் ராகுல் காந்தியும் தான் எனக் கூறிய கே.சி. வேணுகோபால், நீட் தொடர்பான குறைபாடுகள் முழுமையாக சரிசெய்யப்படாவிட்டால் நாடு முழுவதும் போராட்டங்கள் மேலும் தீவிரமடையும்என்று எச்சரித்தார்.
மேலும், ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் காங்கிரஸ் பயிற்சி முகாமில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாகவும், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு காட்டமான பதில் கொடுத்த உதயகுமார்
நீட் தேர்வு, மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் அரசியல் அரங்கிலும்முக்கிய விவாதமாக உருவெடுத்துள்ளது. மாணவர்கள் மீதான நடவடிக்கைக்கு மத்திய அரசு என்ன விளக்கம் அளிக்கிறது என்பதும், நீட் தொடர்பான எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தத்திற்கு அரசு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதும் அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்பட்டு வருகிறது.
Source link
