சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில் ‘பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனக்கு நேரடியாகவும், செல்போனில் பேசியும் பாலியல் தொல்லை கொடுக்கிறார் என்றும், விஷயத்தை வெளியில் சொன்னால் தொலைத்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்’. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், துணிச்சலாக வந்து புகார் அளித்த மாணவியை பாராட்டியும், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
