ரவி மோகன், ஆர்த்தி விவாகரத்து: ரவி மோகனும், ஆர்த்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு மகன்களுக்கு பெற்றோராக இருந்து வந்த நிலையில் பிரிந்துவிட்டார்கள். ஆர்த்தி உடன் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் சுய மரியாதையை இழந்து கொடுமையை அனுபவித்ததாக கூறினார். விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றார் ரவி மோகன்.
இந்நிலையில் தனக்கு ரவி மோகன் செலவுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஆர்த்தி. அந்த மனு விபரம் கசிந்ததை பார்த்த சினிமா ரசிகர்களோ, ஒரு மாதத்தில் ரூ. 40 லட்சத்தை எப்படி செலவு செய்வார்?. ரவி மோகன் இதுக்கே தனியாக வேலை செய்ய வேண்டும் போலயே என்றார்கள்.
ஆர்த்தியின் ஜீவனாம்சம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது விவாகரத்து வழக்கு விசாரணை முடியும் வரை மாதம் ரூ. 40 லட்சம் அல்ல ரூ. 3 லட்சம் ஆர்த்திக்கு ரவி மோகன் கொடுக்க வேண்டும். மேலும் மகன்களை தங்கள் அப்பாவை சந்திக்க எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரவி மோகன் பிள்ளைகள்: மகன்கள் ஆரவ், அயானை பார்க்க விடாமல் தடுக்கிறார் ஆர்த்தி. பள்ளிக்கு பாடிகார்டுடன் அனுப்பி வைக்கிறார். என் மகன்கள் கார் விபத்தில் சிக்கியதை கூட என்னிடம் தெரிவிக்கவில்லை. விபத்து குறித்து அறிந்து பதறிப் போன போதும் என்னை பிள்ளைகளை பார்க்க விடாமல் செய்துவிட்டார் ஆர்த்தி என்று வேதனைப்பட்டார் ரவி மோகன். இந்நிலையில் மகன்களை சந்திக்க இனி ரவிக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
எனக்கு எல்லாமே என் மகன்கள் தான் என்று கூறி வருகிறார். ஜீவனாம்சம் மற்றும் மகன்களை சந்திக்கும் விஷயத்தில் ரவி மோகனுக்கு சாதமாக தீர்ப்பு வந்திருப்பதால் இனி அவர் நிம்மதியாக படங்களில் கவனம் செலுத்துவார் என்று ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.
ரவி கண்ணீர்: ஒரு கட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அழுதுவிட்டார் ரவி மோகன். எப்பொழுதும் சிரித்த முகமாக ஜாலியாக இருக்கும் நபர் இப்படி அழுகிறாரே என்று ரசிகர்கள் பதறிவிட்டார்கள். ரவி மோகனை பார்த்துவிட்டு தங்களின் மென்ட்டல் ஹெல்த் பற்றி ஆண்கள் பேச ஆரம்பித்தார்கள். தன்னால் இப்படியொரு நல்ல விஷயம் நடந்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுவதாக கூறினார் ரவி மோகன்.விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வரும் வரை நான் படங்களில் நடிக்க மாட்டேன் என்று ரவி கூறிய நிலையில் இப்படியொரு தீர்ப்பு அவருக்கு நிச்சயம் ஆறுதலை கொடுக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.
கையில் காசு இருக்காது: தாங்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து வெறும் காலுடன் வெளியே வந்ததாக கூறினார் ரவி. சம்பாதித்தாலும் கூட ஆர்த்தியிடம் தான் கேட்டு காசு வாங்க வேண்டும். நான் ஏடிஎம் கார்டை பயன்படுத்தினால் ஆர்த்திக்கு மெசேஜ் போகும். உடனே எதுக்கு செலவு செய்த என்று கேள்வி மேல் கேள்வி கேட்பார். நான் நிறைய கொடுமைகளை அனுபவித்தாலும் வெளியே சொல்லாமல் அமைதியாக இருந்தேன். அது தான் என் குணம் என்றார் ரவி.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
இதையடுத்து விழா ஒன்றில் முன்பு சீயான் விக்ரம் ரவி மோகன் பற்றி பேசி வீடியோ வெளியானது. என்னிடம் காசு இல்லை என்று ரவியிடம் கேட்டால் அவனிடமும் இருக்காது. அவன் தன் மனைவியிடம் வாங்கிக் கொடுப்பான் என்றார்.
Source link
