சென்னை: மாதவரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு, கடந்த 2016 மற்றும் 2021 என தொடர்ச்சியாக இருமுறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவி வகிப்பவர் எஸ்.சுதர்சனம். தற்போது 3-வது முறையாக ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கும் முனைப்பில் தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
மாதவரம் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து பிரச்சாரத்தின்போது விளக்கிப் பேசி வருகிறார்.
அவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் மாதவரம் தொகுதியில் கல்வி, சுகாதார மேம்பாட்டு வசதிகள், குடிநீர், தெருவிளக்குகள், கழிவுநீர் கால்வாய், மழைநீர் கால்வாய், பேருந்து நிலையம், பட்டா, கட்டமைப்பு வசதிகள் என பல கோடி ரூபாய் செலவில் 5,551 பணிகளை செயல்படுத்தி உள்ளேன். ரூ.91.30 கோடியில் தணிகாசலம் நகர் கால்வாய் நீர்வழித் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
