மாசி மாத ராசிபலன் பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.
மேஷம் ராசி அன்பர்களே!
குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.. எதிரிகளின் சூழ்ச்சிகளை தக்க தருணம் பார்த்து முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர் கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு எதிரிகளால் பிரச்னை களும், கடன் தொல்லைகளும் ஏற்படக்கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக இருக்கும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின் படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர் கள். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும்.
அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். அதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். சிலருக்கு அவர்கள் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த மாதம் ஈடுபடலாம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தோழியர்கள் வட்டாரத்தில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டப்படும். பணிக்குச் செல்லும் பெண்களுக்கு, அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.
நல்ல நாள்: பிப்ரவரி 16,18,21,25,27 மார்ச் 1,3,6,8,13
சந்திராஷ்டமம் : மார்ச் 9 காலை முதல் 10,11 இரவு வரை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
வழிபடவேண்டிய தெய்வம்: சூரியன், தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு செம்பருத்திமாலை அணிவித்து அர்ச்சனை செய்வதும், ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வதும் நன்மை தரும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.
ரிஷபம் ராசி அன்பர்களே!
பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவி கிடைக்கும். அதே நேரத்தில் அவர்களால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் உயரும். உடல் நலனில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் அவருடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
வேலைக்குச் செல்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படக்கூடும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். பாராமுகமாக இருந்த அதிகாரிகள் ஆதரவாக இருக்கும் சூழ்நிலை ஏற்படக்கூடும்.
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை காணப்படுகிறது. ஆனாலும், மறைமுகப் பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவரின் அன்பும் அவர் வழி உறவினர்களால் நன்மைகளும் ஏற்படும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண் களுக்கு எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.
நல்ல நாள்: பிப்ரவரி 15,16,18,23,26,28 மார்ச்: 1,3,6,8,9
சந்திராஷ்டமம்: பிப் 13,14 இரவு வரை; மார்ச் 11 இரவு முதல் 12, 13,14 காலை வரை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், மகாலட்சுமி
பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வதும், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றுவதும் சிறந்த பலன்களைத் தரும்.
மிதுனம் ராசி அன்பர்களே!
திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்களும் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வபக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். மாதப் பிற்பகுதியில் குடும்பப் பெரியவர்களால் நன்மைகள் நடக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண் டாகும். ஆண்களுக்கு பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவைப்படுகிறது. தாயாருடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும்.அவருடைய உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தாய்வழி உறவினர் களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.
அலுவலகத்தில் எப்போதும்போல் உங்கள் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரின் பாராட்டுகளைப் பெறக் கூடும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்பட சாத்தியமுள்ளது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், வியாபாரத்தை விரிவு படுத்தும் முயற்சிகளையும் தவிர்க்கவும். சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகளைச் சந்திக்க நேரிடலாம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பல வகைகளிலும் முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். கணவரின் பாராட்டுகள் கிடைக்கும்.அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும்.
நல்ல நாள்: பிப்ரவரி 13,18,22,24,28 மார்ச் 2,4,6,11,12,13
சந்திராஷ்டமம் : பிப் 14 இரவு முதல் 15,16,17 காலை வரை; மார்ச் 14 காலை முதல்
அதிர்ஷ்ட எண்கள்: 7, 9
வழிபடவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி
பரிகாரம்: விஷ்ணுசஹஸ்ரநாமம் மற்றும் மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாராயணம் செய்வது நல்ல பலன்களைத் தரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.
கடகம் ராசி அன்பர்களே!
அனைத்து விஷயங்களிலும் சற்று பொறுமையாக இருப்பது அவசியம். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்பு ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும். நவீன ரக மின்சார, மின்னணுப் பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் அனுகூலமாக முடியும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு வெளியூர்களில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் மற்றும் ஆலயங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களால் ஆதாயமும் ஏற்படும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
அலுவலகப் பணிகளில் சற்று கூடுதல் கவனம் செலுத்தவேண்டி இருக்கும். சக பணியாளர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நிர்வாகத்தினரின் அதிருப்திக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் சற்று இழுபறிக்குப் பிறகே முடியும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத் துக்குச் செல்லும் பெண்களுக்கு பல வகைகளிலும் அனுகூலமான மாதம் இது.
நல்ல நாள்: பிப்ரவரி 13,16,20,22,26; மார்ச் 1,6,7,9,13,14
சந்திராஷ்டமம் : பிப் 17 காலை முதல் 18,19 மாலை வரை
அதிர்ஷ்ட எண்கள்: 4,6
வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை, முருகப் பெருமான்
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி பாராயணம் செய்வதும், ஞாயிற்றுக்கிழமைகளில் துர்கைக்கு அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.
சிம்மம் ராசி அன்பர்களே!
புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் சாதகமாக முடியும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சி கள் நல்லபடி நடைபெறும். உறவினர்கள் வருகை யால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் – மனைவிக் கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி, ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாக மும் நிறைந்திருக்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்களின் விருப் பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளை அல்லது பெண்ணின் திருமணம் தொடர் பான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்ல சம்பந்தம் அமைய வாய்ப்பு உள்ளது. இளைய சகோதரர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பதுடன், அதனால் ஆதாயமும் அடைவீர்கள். சிலருக்கு பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.
எதிர்பாராத சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. பதவி உயர்வு மற்றும் விரும்பிய இடத்துக்கு மாறுதல் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது சாதகமாக முடியும். நிர்வாகத்தினரின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும்.
தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும். பங்குதாரர்களால் வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். குடும்பப் பொறுப்புகளை நிறை வேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை.
நல்ல நாள்: பிப்ரவரி 13,15,17,22,25,28 மார்ச் 5,8,9,10,11
சந்திராஷ்டமம் : பிப் 19 மாலை முதல் 20, 21 இரவு வரை
அதிர்ஷ்ட எண்கள்: 6,7
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை, மகாவிஷ்ணு
பரிகாரம்: புதன்கிழமைகளில் விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும், வியாழக்கிழமை களில் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.
கன்னி ராசி அன்பர்களே!
பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டா கும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், குடும்பத்தில் தந்தை வழியில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால்,அவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர்கள் தலையிடுவதை அனுமதிக்க வேண்டாம். அதன் மூலம் தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.
அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நினைத்த விஷயங்களை நினைத்தபடி நல்ல விதமாக நிறைவேற்றி மகிழும் சந்தர்ப்பம் ஏற்படும். மேலதிகாரிகளின் பாராட்டுகளும் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
தொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் படிப் படியாக உயரும். ஆனால், முன்பின் தெரியாதவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டாம். ஷேர் மூலம் ஆதாயம் வரும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சற்று சிரமம் இருக்கவே செய்யும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலைச்சுமை கூடுதலாக இருக்கும்.
நல்ல நாள்: பிப்ரவரி 13,15,17,19,25,28 மார்ச் 3,5,8,11,12,13
சந்திராஷ்டமம் : பிப் 21 இரவு முதல் 22,23 இரவு வரை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 9
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான், ஆஞ்சநேயர்
பரிகாரம்: திங்கள்தோறும் சிவபெருமானுக்கு வில்வதளத்தால் அர்ச்சனை செய்வதும், சிவஸ்துதிகளைப் பாராயணம் செய்வதும் நன்மை தரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடவும்.
துலாம் ராசி அன்பர்களே!
அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக் கூடும். தெய்வபக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பும் ஏற்படும். பெண்களால் பொருள் சேர்க்கை உண்டாகும். உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை அளவோடு பழகவும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளாலும் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவருடைய தேவைகளை நிறைவேற்ற முயற்சி செய்ய வும்.நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். சகோதரர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும்.
நிர்வாகத்தினரிடம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். வேறு வேலைக்கு முயற்சி செய்வதாக இருந்தால் தாராளமாக செய்யலாம். பணிகளில் மட்டும் சற்று கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும். மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இந்த மாதம் வேண்டாம். மாதப் பிற்பகுதியில் ஓரளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும்.உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு தருவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நல்ல நாள்: பிப்ரவரி 17,18,20,22,26,28; மார்ச் 1,6,7,9,11
சந்திராஷ்டமம் : 23 இரவு முதல் 24,25 இரவு வரை
அதிர்ஷ்ட எண்கள்: 2,7
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், விநாயகர்
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்வதும், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதும், வெள்ளிக்கிழமைகளில் விநாயகருக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.
விருச்சிகம் ராசி அன்பர்களே!
பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலைத் திருக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண் டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவி கள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்விகச் சொத்துப் பிரச்னை யில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. வெளியூர்ப் பயணங்களின்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள் வது அவசியம். சுபச் செலவுகள் அதிகரிக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
அலுவலகத்தில் உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். மற்றவர்களின் விஷயங்களில் அவசியமின்றி தலையிட வேண்டாம். பணி தொடர்பான பயணங்களால் அலைச்சலும் சோர்வும் அதிகரிக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் எளிதாக முடி யும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகள் வெற்றி பெறும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மாதத்தின் பெரும்பகுதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
சாதகமான நாள்கள்: பிப்ரவரி: 13,16,18,23,24 மார்ச்: 2,3,7,10,12
சந்திராஷ்டமம் : பிப் 25 இரவு முதல் 26,27,28 அதிகாலை வரை
அதிர்ஷ்ட எண்கள்: 7, 9
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர், பெருமாள்
பரிகாரம்: விநாயகர் அகவல் பாராயணம் செய்வதும், விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணி வித்து, தும்பைப் பூக்களால் அர்ச்சனை செய்வது நன்மை தரும். சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
தனுசு ராசி அன்பர்களே!
வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அவர்களால் மகிழ்ச்சியும் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு புதிய சொத்துக்களின் சேர்க்கை ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் முயற்சிகளுக்கு மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பப் பெண்கள் பக்கபலமாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். நீண்டநாள்களாகச் செல்ல நினைத்த ஆலயங்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
அலுவலகத்தில் புதிய கிளை தொடங்குவது தொடர்பான பணிகளைச் செவ்வனே செய்து நிர்வாகத் தினரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். திடீர் பயணங்களுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்குப் பணியின் காரணமாக தற்காலிகமாக குடும்பத்தைப் பிரிந்திருக்க நேரிடும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும். சக போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ தவிர்ப்பது நல்லது.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
நல்ல நாள்: பிப்ரவரி: 14,17,21,23,25,27 மார்ச்: 3,4,7,12
சந்திராஷ்டமம் : பிப் 1,முதல் 2 இரவு வரை; மார்ச் 1முதல் 2 காலை வரை
அதிர்ஷ்ட எண்கள்: 4, 9
பரிகாரம்: வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம்
வெள்ளியன்று துர்கை வழிபாடு
வழிபடவேண்டிய தெய்வம்; தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர்
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் நவகிரகங்களில் குருபகவானுக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், சனிக்கிழமைகளில் அனுமனுக்கு அர்ச்சனை செய்து, அனுமன் சாலீசா படிப்பதும் நன்மை தரும்.
மகரராசி அன்பர்களே!
பொருளாதர வசதி திருப்தி தருவதாக இருக்கும். எதிரிகள் பணிந்து போவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றபடி வசதி வாய்ப்புகளுக்குக் குறைவு இருக்காது. உங்களுக்கு ஏற்பட்டிருந்த அவப்பெயர் விலகும். குடும்பத்தில் மனைவி மற்றும் மகளின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலைமைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் முடிவதில் தடை, தாமதங்கள் ஏற்படும். அவருடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தந்தையை அனுசரித்துச் செல்வது நல்லது. அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும் என்றாலும், சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும். சகோதரி களின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். தாய்மாமன் வகை உறவுகளால் சில தர்ம சங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும்.
எதிர்பார்த்தபடியே பதவி உயர்வுக்கும் சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்களின் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.
தொழில் மற்றும் வியாபாரத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கு லாபம் கிடைக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று சிரமம் தரும் மாதமாக இருக்கும். ஆனாலும், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
நல்ல நாள்: பிப்ரவரி: 13,17,19,20,25,28 மார்ச்: 1,5,6,9,13
சந்திராஷ்டமம் : மார்ச் 2 காலை முதல் 3,4 பகல் வரை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி, விநாயகர்
பரிகாரம்: விநாயகருக்கு வெள்ளிக்கிழமைகளில் தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றி, அறுகம்புல் லால் அர்ச்சனை செய்வது நல்லது. மேலும் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர் கொண்டு அர்ச்சித்து வழிபடுவதும் நன்மை தரும்.
கும்பம் ராசி அன்பர்களே!
எதிலும் வெற்றியே கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், மாதப் பிற்பகுதியில் சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். காரியங்கள் அனு கூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகள் கைகூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் சில தடைகள் ஏற்படும். தந்தையின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மாத முற்பகுதியில் எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.
உங்கள் பணிகளைக் குறித்த நேரத்தில் முடித்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சில நேரங்களில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப திட்டமிட்டுச் செயல்பட்டு முடித்து விடுவீர்கள்.
தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்ததை விட பணவரவு கூடுதலாகக் கிடைக் கும். ஆனால், அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் லைசென்ஸ் போன்ற விஷயங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
நல்ல நாள்: பிப்ரவரி 15,17,19,21,24,27 மார்ச் 2,3,7,11
சந்திராஷ்டமம்: மார்ச் 4 பகல் முதல் 5,6 இரவு வரை
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான், பைரவர்
பரிகாரம்: அஷ்டமி தினத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும், செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.
மீன ராசி அன்பர்களே!
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும் மாதம் இது. வழக்குகளில் இழுபறியான நிலையே காணப்படுகிறது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகையும், அவர்களால் உதவிகளும் உண்டு. ஆனால், மாதக் கடைசியில் அவர்களில் சிலரால் பிரச்னைகளும் ஏற்படலாம் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். சுபநிகழ்ச்சி களில் கலந்துகொள்வீர்கள். அரசு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தந்தையிடம் எதிர் பார்த்த பண உதவி கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.
அதிகரிக்கும் பணிகளின் காரணமாக விடுப்பில் சென்றுவிடலாமா என்ற எண்ணம் ஏற்படக்கூடும். சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி சலுகைகள் கிடைத்தாலும் அதன் பயன் முழுவதும் கிடைத்து விடாதபடி சில தடைகள் ஏற்படும்.
தொழில், வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். போட்டிகள் அதிகரிக்கும். சக வியாபாரிகளால் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வரும். வீண் அலைச்சலும் அதனால் மனச்சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். வியாபாரத்தை முன்னிட்டு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதப் பிற்பகுதியில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.
நல்ல நாள்: பிப்ரவரி: 13,15,17,22,24,26,28 மார்ச் 2,4,10,12,13
சந்திராஷ்டமம் : மார்ச் 6 இரவு முதல் 7,8,9 காலை வரை
அதிர்ஷ்ட எண்கள்: 3,5
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், துர்கை
பரிகாரம்: தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் ராகுகால வேளையில் துர்கைக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வது நல்லது.
