11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தண்ணீர் பாட்டில், தலைக் கவசத்தடன் கூடிய சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் விஜய் டெல்டா மாவட்டத்தில் இருந்து தொடங்கி வைக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து காணலாம்.
தமிழ்நாட்டு அரசு பள்ளியில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் சார்பில், 2026-27ஆம் ஆண்டில் ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் கூடிய நவீன மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், குறைந்த விலையில் ஹீரோ சைக்கிள்ஸ் (Hero Cycles) ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இந்த சூழலில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்க டெல்டா மாவட்டங்களை ஒன்றை முதல்வர் விஜய் பரிசலித்து வருவதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை வழங்கப்பட்ட சைக்கிள்கள்
பள்ளிகள் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த சைக்கில் பழைய மாடல் என அறியப்படும், ராலி சைக்கில் அமைப்பை கொண்டது. இந்த ராலி சைக்கிள் உறுதியான இரும்பு சட்டத்தை கொண்டு அமைக்கப்பட்ட க்ளாசிக் சைக்கிள் மாடல் ஆகும். ஆனால் இந்த ஆண்டு முதல் ஹெல்மெட், வாட்டர் பாட்டில் கொண்டு இந்த காலத்திற்கு ஏற்ப நவீனமாக வடிவமைக்கப்பட்ட மாடல் கொண்ட சைக்கிளாக இருக்குமென கூறப்படுகிறது.
ஏன் டெல்டா மாவட்டங்கள்
டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் கடந்த தேர்தலில் ஒரு இடங்களையும் கைப்பற்றவில்லை. அதுபோது தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் ஒரு சில தொகுதிகளை மட்டுமே தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றியது.
ஒருவேளை டெல்டா மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் பாதி தொகுதிகளை தவெக வென்று இருந்தால், இந்த சமயம் தவெக தமிழகத்தில் தனித்து வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்த கட்சியாக அரசை முன்னெடுத்து சென்று இருக்கும். இதனால் முதல்வர் விஜய் இந்த திட்டத்தை டெல்டா மாவட்டத்தில் இருந்து தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதுவரை டெல்டா பக்கம் செல்லாத முதல்வர்
முதல்வர் விஜய் ஆட்சி அமைத்ததில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதி மையங்களுக்கும் முதல்வர் சென்று, திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். அவ்வகையில், கோவையில் பெரியார் அறிவுலக நூலகம் மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் ஈரோட்டில் மேட்டூர் அணைத் திறப்பு சென்னையில் பல்வேறு அரசுத் திட்டங்கள் தொடக்கம்என அவர் பல திட்டங்களை தொடங்கிவைக்கவும், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சென்றுள்ளார். ஆனால் இதுவரை அவர் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு அவர் செல்லவில்லை.
திமுகவிற்கு கைக் கொடுத்த டெல்டா
கடந்த தேர்தலில் திமுகவிற்கு டெல்டா மாவட்டங்கள் கைக்கொடுத்ததாக கூறப்படுகிறது. டெல்டா மாவட்டங்கள் அனைத்திலும் திமுக மற்றும் அதன் அப்போதைய கூட்டணி கட்சிகள் பாதிக்கு மேற்பட்ட தொகுதிகள் வென்றது. இந்த சூழலில் முதல்வர் விஜய் டெல்டாவை குறிவைத்து முதல்வர் விஜய் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
கிராமப்புறங்களாகவே இருக்கும் டெல்டா பகுதிகள்
இன்றும் டெல்டா மாவட்டங்களின் நிறைய பகுதிகள் கிராமங்களாகவும், குக்கிராமங்களாகவும் உள்ளன. இதனால் அப்பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் போதிய பேருந்து மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் நடந்து செல்லும் சூழலில் உள்ளது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் இருந்து மாணவர்களுக்கு சைக்கிள் கொடுத்து இத்திட்டத்தை தொடங்குவதன் மூலம் மாணவர்கள் வழியே அப்பகுதியில் வாக்கு வங்கி கணிசமாக உயரும் என கூறப்படுகிறது.
Source link
