இந்துார்: தேசிய டேபிள் டென்னிஸ் ஒற்றையரில் மானவ் தாக்கர், யாஷஸ்வினி சாம்பியன் பட்டம் வென்றனர்.
மத்திய பிரதேசத்தின் இந்துாரில், சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், பெட்ரோலியம் விளையாட்டு மேம்பாட்டு அணியின் மானவ் தாக்கர், ரயில்வே அணியின் ஜீத் சந்திரா மோதினர். இதில் மானவ் 4-1 (11-2, 11-4, 6-11, 11-9, 11-3) என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதல் முறையாக தேசிய பட்டத்தை கைப்பற்றினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், பெட்ரோலியம் அணியின் யாஷஸ்வினி கோர்படே, சின்ட்ரேலா தாஸ் மோதினர். இதில் யாஷஸ்வினி 4-3 (11-6, 12-14, 11-5, 9-11, 13-11, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று, தனது முதல் தேசிய பட்டத்தை தட்டிச் சென்றார்.
கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் அங்கூர் பட்டாசார்ஜி (மேற்கு வங்கம்), சுஹானா சைனி (ஹரியானா) ஜோடி 3-2 (11-9, 11-7, 9-11, 13-15, 12-10) என, மேற்கு வங்கத்தின் அனிகேத் போஸ், சம்பிரிதி ராய் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
