மானாமதுரை: பா.ஜ.,அரசு இருக்கும் வரை நீட் விலக்கு கிடைக்காது. அரசியலில் கடுஞ் சொல்லை தவிர்க்க நகைச்சுவையாக பேச

மானாமதுரை: பா.ஜ.,அரசு இருக்கும் வரை நீட் விலக்கு கிடைக்காது. அரசியலில் கடுஞ் சொல்லை தவிர்க்க நகைச்சுவையாக பேச வேண்டும் என சிவகங்கை எம்.பி.,கார்த்தி கூறினார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தி.மு.க.,கூட்டணி தேர்தல் பணிமனைக்கு வந்த அவர் கூறியதாவது: நீட் வேண்டாம் என்பதே பரவலான கருத்து. இதற்கு மற்ற மாநிலங்களும் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் பா.ஜ.,அரசு இருக்கும் வரை நீட் விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை, காங்கிரஸ் தலைமையிலான அரசு வந்தால் மாநிலங்களுக்கு விருப்பத்தேர்வாக முடிவு எடுக்க வாய்ப்பு வழங்கப்படும்.

தமிழக அரசு நீட்டை எதிர்த்தாலும், மாணவர்களுக்கு கோச்சிங் வழங்கி வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடும் உள்ளது.காங்கிரசில் 28 பேரைத் தான் திருப்தி படுத்த முடியும், 29வது நபருக்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும். சீமான் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒவ்வொரு தொகுதிகளிலும் நின்று வருகிறார். சீமான் தேர்தலின் போது மட்டுமே வருவார், தேர்தலுக்குப் பிறகு வரமாட்டார்.

காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் சி.ஆர்.,சுந்தர்ராஜன் ராஜினாமா செய்தது வருத்தமாக உள்ளது. அவருக்கு சிவகங்கையில் சீட் கிடைக்க எவ்வளவோ முயற்சி செய்தோம். அரசியலில் கடுஞ் சொல்லை தவிர்க்க வேண்டும், நகைச்சுவையாக பேச வேண்டும் என்றார்.

Source link