அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.தர்மபிரபு நேற்றிரவு பிறப்பித்துள்ள தீர்ப்பில், “தேர்தல் நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கி விட்டதால் அதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பாக ராமதாஸ் தரப்பி்ல் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2 இடைக்கால மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
அதேநேரம் ராமதாஸ் இந்த கோரிக்கைகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகி பரிகாரம் தேடிக்கொள்ளலாம். அதேபோல, நிலுவையில் உள்ள பிரதான வழக்கில் இடையீட்டு மனுதாரராக கட்சியின் பொதுச் செயலாளரான வடிவேல் ராவணனை இணைக்க வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப்படுகிறது. அன்புமணிக்கு மாம்பழம் சி்ன்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் நிராகரிக்கப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றம் 3 நாட்களில் இந்த வழக்கில் தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்தியிருந்த நிலையில், சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எம்.தர்மபிரபு 2 நாட்களில் தீர்வு கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
