மாரடைப்பால் உயிரிழந்த கணவர்; குன்னூர் கிளையின் முதல் பெண் நடத்துனராக தடம் பதித்த மனைவி!

நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் அண்மை காலமாக பெண்களை நடத்துநர்களாக நியமித்து வரும் நிலையில், குன்னூர் கிளையில் முதல் பெண் நடத்துநராக தீபா நியமிக்கப்பட்டிருப்பது பெண்கள் பலருக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நடத்துநர் தீபா

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள ஓட்டுப்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் ரவி. தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்த இவருக்கு கடந்த 2009 – ம் ஆண்டு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஓட்டுநர் ரவியின் இழப்பால் அவரின் மனைவி மற்றும் இரண்டு மகன்களும் கடுமையான இன்னலுக்கு உள்ளாகி வந்துள்ளனர். இதனை ஈடு செய்யும் விதமாக ரவியின் ஓட்டுநர் பணிக்கு இணையாக அவரின் மனைவி தீபாவிற்கு அரசு பேருந்து நடத்துனர் பணியை வழங்கி ஆணை பிறப்பித்திருக்கிறது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்.

நடத்துனர் தீபா
நடத்துனர் தீபா

பணி நியமன ஆணையைப் பெற்றுக் கொண்ட தீபா, அரசு போக்குவரத்து கழகத்தின் குன்னூர் கிளையின் முதல் பெண் நடத்துனராக தடம் பதித்து இன்று பயணத்தை தொடங்கியிருக்கிறார். நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் அண்மை காலமாக பெண்களை நடத்துநர்களாக நியமித்து வரும் நிலையில், குன்னூர் கிளையில் முதல் பெண் நடத்துனராக தீபா நியமிக்கப்பட்டிருப்பது பெண்கள் பலருக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link