புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணியை வீழ்த்துவதற்கான பரந்த மேடையை அமைக்க திமுக – காங்கிரஸ் தலைமை தவறிவிட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லாஸ்பேட்டை தொகுதியில் ராஜாங்கம், திருபுவனை தொகுதியில் தட்சிணாமூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர்களை அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணியை முறியடிக்கிற திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இணைந்து போட்டியிடுகிறது. அப்படிப்பட்ட நிலை புதுச்சேரியில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், இங்குள்ள காங்கிரஸ் – திமுக தலைவர்களின் அணுகுமுறை, அவர்களின் சொந்த சுயநலபோக்கால் அப்படிப்பட்ட நிலை ஏற்படவில்லை.
