மார்ச் 26: துளு மொழி பேசும் ஹிந்துவான, மஞ்சுநாத் ராய் – கன்னட மொழி பேசும் கத்தோலிக்க கிறிஸ்துவரான, ஸ்வர்ணலதா

மார்ச் 26: துளு மொழி பேசும் ஹிந்துவான, மஞ்சுநாத் ராய் – கன்னட மொழி பேசும் கத்தோலிக்க கிறிஸ்துவரான, ஸ்வர்ணலதா தம்பதியின் மகனாக, கர்நாடக மாநிலம், பெங்களூரில், 1965ல் இதே நாளில் பிறந்தவர், பிரகாஷ் ராய்.

இவர், பெங்களூரு செயின்ட் ஜோசப் பள்ளி, செயின்ட் ஜோசப் வணிகவியல் கல்லுாரியில் படித்தார். மேடை நாடக நடிகராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்த இவர், ‘பிசிலு குதுரே’ என்ற தொலைக்காட்சி தொடரிலும், கன்னட சினிமாக்களில் சிறு வேடங்களிலும் நடித்தார்.

தமிழில் இவரை, கே.பாலச்சந்தர், டூயட் என்ற படத்தில், பிரகாஷ் ராஜ் என்ற பெயரில் வில்லனாக அறிமுகம் செய்தார். தொடர்ந்து, கில்லி, சிங்கம், ஆசை, இருவர், அபியும் நானும், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் ந டித்து புகழ்பெற்றார்.

‘டூயட் மூவீஸ்’ என்ற நிறுவனத்தை துவங்கி, அழகிய தீயே, மொழி, அபியும் நானும், பயணம் உள்ளிட்ட படங்களை தயாரித்தார். தமிழில், இருவர், காஞ்சிவரம் ஆகிய படங்களுடன், தெலுங்கு, கன்னட மொழி படங்களின் நடிப்புக்காக, ஐந்து தேசிய விருதுகளுடன், ‘பிலிம்பேர்’ விருதுகளையும் பெற்றார்.

அரசியல், சமூக சேவையில் ஈடுபடும் இவருக்கு, இன்று 61வது பிறந்த தினம்!

Source link