மாற்றத்திற்கு தயார்! கேரள சட்டசபை தேர்தலில், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடும்

மாற்றத்திற்கு தயார்!

கேரள சட்டசபை தேர்தலில், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாநில மக்களின் குரலையும், அவர்களின் நம்பிக்கையையும் பிரதிபலிக்கின்றனர். கேரள மக்கள், மாற்றத்திற்கு தயாராக உள்ளனர். வரும் தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,

விழிப்புடன் இருங்க! மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு பின், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப் பு மூலம், மக்களின் குடியுரிமையை பறிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பே, அதிகாரப்பூர்வமற்ற ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்., கட்சி

நிர்வாக திறமையற்ற அரசு! கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி, நிர்வாக திறமையற்ற அரசாக செயல்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவே, கடன் வாங்க வேண்டிய நிலை உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பணம், லாட்டரி, மது ஆகியவற்றை மட்டுமே சார்ந்திருக்கும் நிலை உள்ளது. காங்., கூட்டணி, இந்த நிலையை மாற்றும். சசி தரூர் லோக்சபா எம்.பி., காங்கிரஸ்

Source link