மாலத்தீவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி

புதுடில்லி: நடப்பு நிதியாண்டில், மாலத்தீவுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதில் கட்டுமான பொருட்களான மணல், ஜல்லி போன்றவையும் அடங்கும்.

இது குறித்து வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

மாலத்தீவுக்கு குறிப்பிட்ட அளவில் அரிசி, பருப்பு, முட்டை, சர்க்கரை, கோதுமை மாவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.

மேலும், மாலத்தீவுக்கு சுற்றுலா துறை அதிக வருவாய் தரும் தொழிலாக உள்ளதால், அங்கு கட்டுமான பணிகள் தடையின்றி நடைபெற ஆற்று மணல், ஜல்லி கற்களும் ஏற்றுமதி செய்யலாம்.

துாத்துக்குடி, முந்த்ரா, ஐ.சி.டி., துக்ளகாபாத், கண்ட்லா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 6 துறைமுகங்கள் வழியாக மட்டுமே மாலத்தீவுக்கான ஏற்றுமதி அனுமதிக்கப்படும்.

2026 – 27ம் நிதியாண்டில் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்ட காலத்தில், குறிப்பிட்ட பொருட்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தாலோ, இனி விதிக்கப்பட்டாலோ, அது பொருந்தாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link