மாஸ்கோ: ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவை வழங்குவோம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், புதிய உச்ச தலைவருக்கு

மாஸ்கோ: ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவை வழங்குவோம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், புதிய உச்ச தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

மேற்காசிய நாடான ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனியின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று இஸ்ரேலும், அமெரிக்காவும் மிரட்டல் விடுத்துள்ளன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின், ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு வாழ்த்து செய்தியோடு, தன் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு அதிபர் மாளிகையான கிரெம்ளின் வாயிலாக அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

உங்கள் தந்தையின் பணியை சிறப்பாக தொடர்வீர்கள், கடுமையான சோதனைகளுக்கு மத்தியில் ஈரான் மக்களை ஒருங்கிணைப்பீர்கள் என்று நம்புகிறேன். தீவிரமான போருக்கு மத்தியில், இந்த பதவியில் இருக்கும் உங்களுக்கு தைரியமும் அர்ப்பணிப்பும் தேவைப்படும்.

எனவே ஈரானுக்கு எங்கள் அசைக்க முடியாத ஆதரவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். ரஷ்யா எப்போதும் ஈரானின் நம்பகமான கூட்டாளியாக இருந்து வருகிறது, எதிர்காலத்திலும் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலைப்பாடு, அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டணியின் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்துக்கு மத்தியில், ரஷ்யா – ஈரான் இடையேயான உறவு மேலும், வலுப்படுவதை காட்டுகிறது.

Source link