மாஸ்கோ: ஈரானுக்கு ரஷ்யா விசுவாசமான நண்பர், நம்பகமான கூட்டாளியாக தொடர்கிறது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர்

மாஸ்கோ: ஈரானுக்கு ரஷ்யா விசுவாசமான நண்பர், நம்பகமான கூட்டாளியாக தொடர்கிறது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறி உள்ளார்.

ஈரானிய புத்தாண்டை முன்னிட்டு, அந்நாட்டின் புதிய ஆட்சியாளர் மொஜ்தபா காமேனி, அதிபர் மசூத் பெசேஷ்கியான் ஆகியோருக்கு ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். அவரின் வாழ்த்துச் செய்தியை ரஷ்ய அதிபர் அலுவலகமான கிரெம்ளின் மாளிகை வெளியிட்டு உள்ளது.

அதில் புடின் கூறி உள்ளதாவது;

ஈரான் மக்கள் கடுமையான சோதனைகளை கண்ணியத்துடன் கடந்து வரவேண்டும். இக்கட்டான இப்படி ஒரு நேரத்தில் ஈரானின் விசுவாசமான நண்பராகவும், ஒரு நம்பகமான கூட்டாளியாகவும் ரஷ்யா தொடர்ந்து நீடிக்கும்.

இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

முன்னதாக ஈரானுக்கு எதிரான அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் போரை, ரஷ்யா கண்டித்தது. ஒட்டு மொத்த மத்திய கிழக்கையும் இவ்விரு நாடுகளும் படுகுழியில் தள்ளியது என்றும் ரஷ்யா கூறி இருந்தது.

Source link