சென்னை:கடந்த மார்ச் மாதத்தின் மொத்த இருசக்கர வாகன விற்பனையில், மின்சார வாகனங்களின் பங்கு, 9.79 சதவீதமாக அதிகரித்துள்ளது.
விற்பனையாகும் 10 இருசக்கர வாகனங்களில், ஒன்று மின்சார வாகனமாக இருப்பதை இது காட்டுகிறது. கடந்த மாதத்தில் 19.51 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையான நிலையில், 1.90 லட்சம் மின்சார வாகனங்கள் ஆகும்.
பெட்ரோல் தட்டுப்பாடு இல்லை என்றாலும், மேற்காசிய போர் காரணமாக தட்டுப்பாடு ஏற்படும் என்ற எதிர்பார்பில், பலர் மின்சார வாகனங்களை தேர்வு செய்ததாக தெரிகிறது. அதேபோல், குறைந்த செயல்பாட்டு செலவு, எளிதான தினசரி பயன்பாடு, அதிக ரேஞ்ச், நம்பகமான கட்டமைப்பு ஆகியவை மின் வாகன விற்பனைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
மின்சார வாகனங்களின் விற்பனை பங்கு, கடந்த ஆண்டு மார்ச்சுடன் ஒப்பிடுகையில், 1.12 சதவீதமும், முந்தைய பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 3.22 சதவீதமும் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் மொத்த இருசக்கர வாகன விற்பனையில், மின்சார வாகனங்களின் பங்கு 6.54 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டை விட, 0.45 சதவீதம் அதிகம் ஆகும்.
கடந்த மாத விற்பனையில், டி.வி.எஸ்., நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
