இ ந்திய பங்கு சந்தையில் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பின்னடைவு ஏற்பட்ட போதிலும், மியூச்சுவல் பண்டு துறை, தொடர்ந்து 3வது ஆண்டாக 20 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2025 மார்ச் காலாண்டில் 67 லட்சம் கோடி ரூபாயாக இருந்த மியூச்சுவல் பண்டு துறையின் மொத்த சொத்து மதிப்பு, 2026 மார்ச் காலாண்டில், கிட்டத்தட்ட 21 சதவீதம் உயர்ந்து 81.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
காரணங்கள்
சிறு முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி., முதலீட்டை நிறுத்தாமல் தொடர்ந்தது
தங்கம், வெள்ளி சார்ந்த இ.டி.எப்., திட்டங்களில் முதலீடு குவிந்தது
‘மல்டி அசட் பண்டு’ திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது
ஆண்டு வாரியான சொத்து மதிப்பு நிலவரம்:
நிதியாண்டு சொத்து மதிப்பு (ரூ.லட்சம் கோடி) வளர்ச்சி சதவீதம்
2020-21 32.10 18.80
2021-22 38.40 19.50
2022-23 40.50 5.60
2023-24 54.10 33.60
2024-25 67.40 24.50
2025-26 81.50 20.90
ஆதாரம்: ஆம்பி
