மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு 73.48 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி

மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு 2026, மார்ச் மாதத்தில் 10 சதவீதம் குறைந்து, 73.48 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது மியூச்சுவல் பண்டுகளின் சங்கமான ‘ஆம்பி’ வெளியிட்டுள்ள தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில் நிகழும் போர் பதற்றங்கள் மற்றும் வரி கொள்கைகள் காரணமாக, பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. இந்த சூழலில், கடன் சார்ந்த பண்டுகளில் அதிகளவு முதலீடுகள் வெளியேறியிருக்கிறது.

வழக்கமாக, நிதியாண்டு இறுதியில், நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், தங்களின் வரி தேவைகளுக்காகவும், முன்பணம் செலுத்துவதற்காகவும், குறுகியகால கடன் பத்திரங்கள் சார்ந்த திட்டங்களில் இருந்து பணத்தை திரும்ப பெறுவது வழக்கம். அந்தவகையில், கடந்த மார்ச் மாதத்தில் ‘லிக்விட், ஓவர்நைட், மனி மார்கெட்’ பண்டுகளில் இருந்து அதிகளவு முதலீடுகள் வெளியேறியுள்ளது.

அதேநேரம், எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்தது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. நடப்பாண்டின் துவக்கத்தில் இருந்தே எஸ்.ஐ.பி., முதலீடுகள் சீராக உள்ளதையும் ஆம்பியின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

மொத்த சொத்து மதிப்பு ஜனவரி 2026 ரூ.80.76 லட்சம் கோடி பிப்ரவரி 2026 ரூ.81.77 லட்சம் கோடி (+1.25%) மார்ச் 2026 ரூ.73.48 லட்சம் கோடி (-10%) எஸ்.ஐ.பி., முதலீடு: ஜனவரி 2026 ரூ.31,002 கோடி பிப்ரவரி 2026 ரூ.29,845 கோடி மார்ச் 2026 ரூ.32,087 கோடி வரவு/வெளியேற்றம் ஒப்பீடு: திட்டத்தின் வகை ஜனவரி 2026 (ரூ) பிப்ரவரி 2026 (ரூ) மார்ச் 2026 (ரூ) (ரூ/கோடியில்) ஈக்விட்டி திட்டங்கள் 24,028 25,977 40,450 கடன் சார்ந்த திட்டங்கள் 74,827 42,106 -2,94,987 ஹைபிரிட் திட்டங்கள் 17,356 11,983 -16,538 மற்ற இ.டி.எப்., திட்டங்கள் 15,005 4,487 19,802 தங்கம் இ.டி.எப்., 24,039 5,254 2,265

அதிக முதலீடுகள் வந்த திட்டங்கள்: (மார்ச் 2026) பிளெக்ஸி கேப் ரூ.10,054 கோடி ஸ்மால் கேப் ரூ.6,263 கோடி மிட்கேப் ரூ.6,063 கோடி லார்ஜ் & மிட்கேப் ரூ.5,307 கோடி மற்ற இ.டி.எப்., திட்டங்கள் ரூ.19,802 கோடி இண்டெக்ஸ் பண்டு ரூ.8,168 கோடி மல்டி அசட் அலகேஷன் பண்டு ரூ.5,212 கோடி முதலீடுகள் வெளியேறிய திட்டங்கள்: (மார்ச் 2026) லிக்விட் பண்டு ரூ.1.34 லட்சம் கோடி ஓவர்நைட் பண்டு ரூ.40,227 கோடி மனி மார்கெட் பண்டு ரூ.29,206 கோடி ஆர்பிட்ரேஜ் பண்டு ரூ.21,113 கோடி

Source link