மிரட்டல் விடுத்த போதிலும், பாகிஸ்தான் சென்றடைந்தார் ஸ்மித்/ Steve Smith Arrives In Pakistan For PSL Amid Tensions Over Threat From Armed Group

பாகிஸ்தான் சூப்பர் லீக் வருகிற 26-ந்தேதி தொடங்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி நேற்று தெரிவித்தார். மேற்கு ஆசிய மோதல் (அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்) காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்தார்.

அத்துடன் வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார். இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள ஆயுதமேந்திய குழுவான ஜமாத்-அல்-அரார் (Jamaat-ul-Ahrar) வெளிநாட்டு வீரர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

டேவிட் வார்னர் மற்றும் சுமித் ஆகியோர் தொடரில் இருந்து விலக வேண்டும். டி20 லீக்கில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டால் வீரர்களின் பாதுகாப்புக்கு உறுதி கிடையாது என அந்தக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Source link