மிளகாய் வரத்து அதிகரிப்பால் கிலோவுக்கு ரூ.50 சரிவு

சென்னை:வரத்து துவங்கியதால், கடந்த மாதம் 1 கிலோ 260 ரூபாய்க்கு விற்பனையான மிளகாய் வற்றல், தற்போது, 210 ரூபாயாக குறைந்துள்ளது என, மதுரை, திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

அறுவடை துவங்கியுள்ளதால் மிளகாய் வற்றல் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம், ஒரு கிலோ மிளகாய் வற்றல் 260 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் 50 ரூபாய் குறைந்து, 210 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தினசரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு 500 கிலோ மிளகாய் வற்றல் வந்து கொண்டிருக்கிறது. போதுமான மழை இல்லாததால் மிளகாய் விளைச்சல் குறைந்துள்ளது. அதனால் இந்த விலை தொடர வாய்ப்புள்ளது. இரண்டு மாதங்களுக்கு வரத்து இருக்கும் என எதிர்பார்க்கிறோம்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மிளகாய் விலை

(கிலோ)

கடந்த வாரம் ரூ.260

தற்போது ரூ.210

குறைவு ரூ.50

அறுவடை சீசன்

மார்ச் முதல் மே மாதம் வரை

Source link