மீண்டும் அதே தேதி; ‘காளிதாஸ் 2’ பட அப்டேட்!

2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி கவனம் பெற்ற படம் ‘காளிதாஸ்’. இப்படத்தை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவகியுள்ளது. இப்படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய ஸ்ரீ செந்திலே இயக்கியுள்ளார். இப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், ‘ஆடுகளம்’ கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜா ரவீந்தர், டி எம் கார்த்திக் , ‘சிங்கம்’ ஜெயவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

இவர்களுடன் ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கீதா, முக்கியமான வேடத்தில் நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார். இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் ட்ரெய்லரும், சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை உருவாக்கியது. பின்பு சென்னையில் இசை வெளியீட்டு விழா நடந்திருக்க அதில் பா.ரஞ்சித், சாந்தனு, கலையரசன் உள்ளிட்டோர் படத்தை பற்றி பாசிட்டிவாக பேசி எதிர்பார்ப்பை அதிகரித்தனர்.  

இப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகவுள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி புரோமோஷன் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. பரத் உள்ளிட்ட படக்குழுவினர் பல்வேறு கல்லூரி நிகழ்வுகளுக்கு சென்று படத்தை விளம்பரப்படுத்தினர். ஆனால் திடீரென ஏப்ரல் 10ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதற்கு காரணம் ஏப்ரல் 3ஆம் தேதி விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான ‘எல்.ஐ.கே’ படம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதாவது முதலில் அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 3ஆம் தேதியே வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்.ஐ.கே. படம் தள்ளிப்போகவுள்ளதாக கூறப்படுகிறது. 

Source link