கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தத் தொடரில் இருந்து நீக்கப்பட்ட வங்கதேசத்திற்கு ஆதரவாக இப்போட்டியை புறக்கணிப்பதாக முதலில் அறிவித்த பாகிஸ்தான், பின்னர் ஐசிசி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போட்டியில் பங்கேற்க சம்மதித்தது. இதனால், இவ்விரு அணிகள் விளையாடும் போட்டி, ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
இந்த சூழலில், இலங்கையின் கொழும்புவில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால், கடந்த போட்டியில் விளையாடாத அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா இன்றைய போட்டியில் களமிறங்குகிறார். சஞ்சு சாம்சன் வெளியேற்றப்பட்டார். அதேபோல, அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
