நேரம், ராஜாராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நஸ்ரியா. நடிகர் பகத்பாசிலை திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா. சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். 2018-ம் ஆண்டு ‘கூடே’ என்ற மலையாள படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார்.
இதை தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு நஸ்ரியா எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. தவிர்க்க முடியாத காரணத்தினால் படம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் நஸ்ரியா மீண்டும் தமிழில் நடிக்க இருக்கிறார். சூர்யா பிரதாப் இயக்கத்தில் உருவாகும் ‘தி மெட்ராஸ் மிஸ்ட்ரி பால் ஆப்எ சூப்பர் ஸ்டார்’ என்ற வெப் தொடரில் நடிக்க இருக்கிறார். இதில் நட்டி, சாந்தனு, பாக்யராஜ், நாசர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்தியாவில் நிகழ்ந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கை மையமாக கொண்டு இந்த தொடர் உருவாகி உள்ளது.
