“மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை”

மதுரையில் திமுகவினர் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு பதவிகளை இழந்துள்ளனர். போலீஸாரால் கைதும் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழக மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால், நிம்மதி கிடைக்க வேண்டுமென்றால், பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். பாதுகாப்பை வழங்கி மக்கள் நிம்மதியாக வாழ அதிமுக ஆட்சிக்கு மீண்டும் வர வேண்டும். 

பஸ்ஸில் பெண்கள் இலவச பயணத்தை பார்த்து திமுக அமைச்சர் ‘ஓசில தான் போறீங்க…’ என கிண்டல் செய்கிறார். 

இன்னொரு அமைச்சர் பெண்களை இழிவாகப் பேசுகிறார். பெண்கள் என்றால் அவ்வளவு இழிவாகப் போச்சா உங்களுக்கு.  பெண்களைப் பார்க்க அவ்வளவு கேவலமாக உள்ளதா?  பெண்கள் ஆசைப்பட்டது சம உரிமை. பெண்கள் ஆசைப்பட்டது சம மரியாதை. பழனிசாமி பெண்களுக்கு மட்டுமில்லை, ஆண்களுக்கும் இலவச  பயணம் என்றுகூறிவிட்டார். அதனால், இனி வீட்டில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து பஸ்சில் இலவசமாக பயணம் செய்யலாம். அதிமுகவுக்கு வாக்களித்தால் நிச்சயமாக மக்கள் வாழ்க்கை தரம் உயரம். 

இவ்வாறு அவர் பேசினார். 

Source link