மீண்டும் மீண்டுமா…-கேட்காத தொண்டர்கள்; ஒரே நாளில் நான்கு விபத்து

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், நேற்று முன்தினம் (06.04.2026) மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் இன்று நெல்லையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். நெல்லை கேடிசி நகரில் பரப்புரை முடித்து தாழையூத்து பகுதியை நோக்கி விஜய்யின் பரப்புரை வாகனம் சென்றபோது நிகழ்ந்த விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து நெல்லை நோக்கிச் சென்றபோது விஜய்யின் பரப்புரை வாகனத்தை பின் தொடர்ந்து வந்த வாகன ஓட்டிகள் அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்டவர்கள் கீழே விழுந்து காயமடைந்தார்கள். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பாரைக்குளம் பகுதியில் பேரிக்காடுகளை வைத்து விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்த 200க்கும் மேற்பட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.

tvk Photograph: (nellai)

கேடிசி நகரில் பரப்புரையை முடித்துக் கொண்டு, மீண்டும் தாழையூத்தில் இருந்து பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜய் சென்றார். விஜய்யின் பிரச்சாரத்தில் நெல்லையில் மட்டுமே இரண்டு விபத்துகள் நடந்திருக்கிறது. முதலில் நடந்த விபத்தில்  ஐந்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள். விஜய்யினுடைய இன்றைய பரப்புரையில் மட்டுமே தற்போது வரை நான்கு இடங்களில் விபத்து சம்பவம் நடந்திருக்கிறது. 

Source link