மீண்டும் மீண்டும் தமிழக மக்களை, முதல்வர் ஸ்டாலினால் ஏமாற்ற முடியாது. கடந்த 2021 தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில், 90 சதவீதம் நிறைவேற்றாமல் வஞ்சித்து, வீதிதோறும் மக்களை போராட விட்டுவிட்டு, மீண்டும் தேர்தல் வந்ததும், பழைய அறிக்கையை துாசி தட்டி புதிய வாக்குறுதிகள் போல் நீங்கள் நாடகமாடலாம்.
ஆனால், உங்கள் புளித்துப்போன தேர்தல் அறிக்கையையும், ஊசிப்போன வாக்குறுதிகளையும் மீண்டும் நம்ப மக்கள் தயாராக இல்லை. மீண்டும் தெருவில் இறங்கி போராட மக்களிடம் தெம்பும் இல்லை.
கடந்து ஐந்து ஆண்டுகளாக கல்வி, முன்னேற்றம், வேலைவாய்ப்பு, விலைவாசியை கட்டுப்படுத்துதல், சமூக நீதி, சட்டம் – ஒழுங்கு என, அனைத்தையும் சீரழித்த தி.மு.க., அரசு, வரும் சட்டசபை தேர்தலிலும் அனைத்திலும், ‘பெயில்’ ஆகும்.
– நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,
