மீண்டும் மூடப்பட்ட ஹார்மூஸ் ஜலசந்தி.! இஸ்ரேலுக்கு பாடம் புகட்டும் ஈரான்.!

லெபனான் மற்றும் ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நிறுத்தினால் மட்டுமே, போர் நிறுத்தத்திற்கு ஈரான் உடன்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மீண்டும் போர் தொடங்கியதாகவே பார்க்கப்படுகிறது.

போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து நேற்று 20 சதவீதம் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தது. தற்போது மீண்டும் ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால், கச்சா எண்ணெய்யின் விலை உயர்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் லெபனான் மற்றும் ஹிஸ்புல்லா மீது தாக்குதல் நடத்தினால், போர் நிறுத்தத்திற்கு அர்த்தமே இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால் போர் நிறுத்த நிபந்தனைகளில், லெபனான் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்ற நிபந்தனை இல்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Source link