மீண்டும் ஸ்மிருதி – பலாஷ் திருமணமா?.. இரு வீட்டார் ஒன்றாக இருக்கும் வீடியோ வைரல்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. நீண்ட கால காதலர் பலாஷ் முச்சல் உடன் இவருக்கு கடந்த ஆண்டு திருமண ஏற்பாடுகள் நடந்தன.

ஆனால் கடைசி நேரத்தில் மந்தனாவின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருமணம் நின்றது.

இதன் திருமணம் ரத்து செய்யப்படுவதாக மந்தனா அறிவித்தார். பலாஷ்க்கு வேறு பெண்ணுடன் தொடர்பிருப்பது கடைசி நேரத்தில் தெரியவந்ததால் தான் திருமணம் ரத்தானதாக கூறப்பட்டது.

சமூக வலைதளங்களில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்தினர்.

இதன்பின் மந்தனா மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் ஸ்மிருதி மற்றும் பலாஷ் குடும்பத்தினர் அண்மையில் ஒன்றாக நிகழ்வொன்றில் சந்தித்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்ம்ருதியின் தந்தை பலாஷ் உடைய சகோதரியுடன் முக மலர்ச்சியுடன் பேசிக்கொள்வது வீடியோ மூலம் புலனாகிறது.

இதனால் ஸ்மிருதி மற்றும் பலாஷ் இடையே பாதியில் நின்ற திருமணம் மீண்டும் நிகழப்போவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கூறி வருகின்றனர்.

Source link