“மீண்டெழ முடியாத பேரழிவு…” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘இறுதி’ மிரட்டல்

ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பை அடுத்து, ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஈரானைப் பாதுகாக்க தங்கள் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக இந்த கணம் வரை 1.4 கோடிக்கும் அதிகமான பெருமைமிக்க ஈரானியர்கள் பதிவு செய்துள்ளனர். நானும் ஈரானுக்காக உயிர்த் தியாகம் செய்ய எந்தக் காலத்திலும் தயாராக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படை மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஈரானில் இது​வரை 2,100-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். அமெரிக்க ராணுவ தரப்​பில் 13 வீரர்​கள் உயி​ரிழந்து உள்​ளனர். சுமார் 700 அமெரிக்க வீரர்​கள் காயமடைந்​திருப்​ப​தாகக் கூறப்படு​கிறது.

இஸ்​ரேலில் 24 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 7,000-க்​கும் மேற்பட்டோர் காயமடைந்​துள்​ளனர். மேற்கு ஆசி​யா​வில் நீடிக்​கும் போரால் உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய், எரி​வா​யுக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டிருக்​கிறது. உடனடி​யாக போரை நிறுத்த வேண்​டும் என்று ஒட்​டுமொத்த உலக நாடு​களும் வலி​யுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link