மீனாட்சி அம்மன் கோவிலில் செப்., 19ல் கும்பாபிஷேகம்

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை, வரும் செப்., 19ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று சென்னையில் நடந்தது.

இதில், திருப்பணிகள் மற்றும் வீரவசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தாலும், ஆண்டு முழுவதும் நடைபெறும் திரு விழாக்கள் மற்றும் உற்சவங்களை நிறுத்த இயலாத காரணத்தால், வரும், செப்., 19ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Source link