மீனாட்சி, ஜெய்ஸ்மின் கலக்கல் * ஆசிய குத்துச்சண்டை பைனலுக்கு தகுதி

உலான்பாடர்: ஆசிய குத்துச்சண்டை பைனலுக்கு இந்தியாவின் மீனாட்சி ஹூடா, ஜெய்ஸ்மின் முன்னேறினர்.

மங்கோலியாவில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்தியாவின் பிரீத்தி (54 கிலோ) பிரியா (60), அருந்ததி (70) என மூன்று வீராங்கனைகள் ஏற்கனவே பைனலுக்கு முன்னேறி உள்ளனர்.

பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் நடப்பு உலக சாம்பியன், இந்தியாவின் மீனாட்சி ஹூடா, அரையிறுதியில் தாய்லாந்தின் திப்சட்சாவை எதிர் கொண்டார். மூன்று சுற்றிலும் அசத்திய மீனாட்சி, 5:0 என்ற கணக்கில் ஒரு மனதாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, பைனலுக்கு முன்னேறினார்.

57 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜெய்ஸ்மின், உஸ்பெகிஸ்தானின் நிகினாவுடன் மோதினார். இதில் போராடிய ஜெய்ஸ்மின் 3:2 என்ற கணக்கில் ‘திரில்’ வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தார்.

ஆண்களுக்கான 60 கிலோ அரையிறுதியில் இந்தியாவின் சச்சின் சிவாச், 4-1 என தாய்லாந்தின் சாக்தா ருவாம்தமை சாய்த்து, பைனலுக்கு தகுதி பெற்றார்.

Source link