முகமது யூனுஸ் வீடு முன் போராட்டம்: வங்கதேச தேர்தல் நெருங்கும் நேரத்தில் பதற்றம்

டாக்கா: வங்கதேச அரசின் இடைக்கால ஆலோசகர் முகமது யூனுஸ் வீடு முன் போராட்டம் போராட்டம் நடத்தியவர்கள் உள்ளே புக முயன்றதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் போராட்டம் காரணமாக வங்கதேசத்தில் பிரதமர் ஆக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகிய பிறகு வரும் அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு இழுபறிக்கு பிறகு வரும் 12ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட ஷேக் ஹசீனாவுக்கும், அவரது கட்சிக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் டாக்காவில் முகமது யூனுஸ் வீடு முன் போராட்டம் வெடித்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஷெரீப் உஸ்மான் ஹாதி கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு இந்த போராட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து டாக்கா முழுவதும் போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டனர். போலீசார் தடுப்புகள் அமைத்து போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர். கையெறி குண்டுகள், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் கருவிகள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்து இருந்தனர்.ஆனால், போராட்டக்காரர்கள் தடுப்புகளை உடைத்துக் கொண்டு முன்னேறி, முகமது யூனுஸ் வீட்டிற்குள் நுழைய முயன்றனர். பாதுகாப்புப் படையினர் அவர்களை தடுக்க முயன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

முன்னதாக இன்று காலை, சம்பள கமிஷன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் எனக்கூறி, அரசு ஊழியர்கள் முகமது யூனுஸ் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் தடுப்புகளை உடைத்துக் கொண்டு அவரது வீட்டுக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு உண்டானது. பிறகு அவர்கள் நுழைவுவாயில் ஒன்றின் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் வங்கதேசத்தில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Source link