முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிருக்கு பயந்தவர் இல்லை – இபிஎஸ் விமர்சனத்திற்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முதலமைச்சர் பிரசாரம் செல்லும் இடமெல்லாம் கூடும் கூட்டத்தை கண்டு வயிற்றெரிச்சலில் விதவிதமாய் எடப்பாடி பழனிசாமி பிதற்றுகிறார்.

ஒப்பற்ற தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி தரக்குறைவாக விமர்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எவ்வளவு வாய் கொழுப்பு இருந்திருந்தால் கொரோனாவில் முதலமைச்சர் போய் சேர்ந்து இருப்பார் என்று இபிஎஸ் பேசுகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிருக்கு பயந்தவர் இல்லை.

எவ்வளவு தடுத்தும் கோவையில் கொரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை நேரில் சென்று பார்வையிட்டு வந்தவர் முதலமைச்சர்.

இப்படி எல்லாம் தரக்குறைவாக பேசுவது இபிஎஸ்-க்கு புதிதல்ல, கொலை, கொள்ளை எல்லாம் இபிஎஸ்-க்கு கைவந்த கலை.

கொரோனா பரவல் காலத்தில் இபிஎஸ் ஆட்சி நடத்திய லட்சணம் அனைவருக்கும் தெரியும்.

சோறு போட்டு வளர்த்து அரசியலில் அடையாளம் காட்டி அந்தஸ்து கொடுத்த ஜெயலலிதா வாழ்ந்த பங்களாவில் என்ன நடந்தது?

இபிஎஸ் ஆட்சி காலத்தில் தான் ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை நடந்தது.

ஜெயலலிதாவின் சொத்துக்கள், கோடிக்கணக்கு மதிப்பிலான நகைகள் மாயமானது இபிஎஸ் ஆட்சியில் தான்.

காமராஜரை கைது செய்யாததால்தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. வரலாறு தெரியாமல் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி

காமராஜர் – கலைஞர் நட்புறவு பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தெரியும்.

இன்றைய பாஜக, ஆர்எஸ்எஸ்-ல் இருப்பவர்கள் தான் காமராஜர் வீட்டிற்கு தீ வைத்தவர்கள்.

காமராஜருக்கு கொள்ளி வைக்க மகன் இல்லை என்ற குறையை தீர்த்தவர் கலைஞர் என்று அன்றைய காங்கிரசார் பேசினர்.

எம்ஜிஆர் வாழ்ந்த ராமாபுரம் தோட்டம் சுடுகாடு போல உள்ளது. இன்று அதிமுக அலுவலகம் உள்ள இடம் ஜானகிக்கு சொந்தமானது.

வி.என்.ஜானகிக்கு சொந்தமான இடத்தில் இருந்துகொண்டு அவருக்கு ஒரு சிலை கூட அங்கு இபிஎஸ் அமைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link