முதலில் ரோபோ நாய், அடுத்தது டிரோன்

சீன தயாரிப்பு ரோபோ நாயை தங்களது சொந்த தயாரிப்பாக காட்சிப்படுத்தி, சர்ச்சையில் சிக்கிய கல்கோட்டியாஸ் பல்கலை, தென்கொரியாவை சேர்ந்த கால்பந்து டிரோனுக்கும் உரிமை கொண்டாடியது தெரிய வந்துள்ளது. ரோபோ நாய் சர்ச்சையில் சிக்கிய அதே பேராசிரியர் தான், இந்த டிரோனையும் தங்கள் மாணவர்களின் சொந்த தயாரிப்பு என பத்திரிகையாளர் ஒருவரிடம் உறுதிபட தெரிவிக்கும் காணொளி வெளியானது.

இந்த டிரோன் தென் கொரியாவின் ஹெல்செல் குழுமத்தின், ஸ்டிரைக்கர் வி 3 மாடல் டிரோனை அப்படியே பிரதிபலிப்பதாகவும், இது அங்கு ஆன்லைனில் கிட்டத்தட்ட 40,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் சமூக வலைதள பயனர்கள் ஆதாரத்துடன் பதிவிட துவங்கினர்.

Source link