மி யூச்சுவல் பண்டு முதலீட்டாளர்களின் முதலீட்டை பாதுகாக்கும் நோக்கில், புதிய வசதி ஒன்றை செபி அறிமுகம் செய்துள்ளது. முதலீட்டாளர்கள் தங்களுடைய போலியோக்களை அவர்களாகவே தற்காலிகமாக முடக்கி வைக்கும் வசதியை செபி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி, வரும் ஏப்., 30ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
முக்கிய அம்சங்கள்
முதலீட்டாளர் தனது போலியோவை ‘லாக்’ செய்துவிட்டால், அவர் மீண்டும் அதை ‘அன்லாக்’ செய்யும் வரை அதிலிருந்து யூனிட்களை வெளியே எடுக்க முடியாது. இது, டிமேட் மற்றும் டிமேட் அல்லாத போலியோக்களுக்கும் பொருந்தும்
லாக் செய்யப்பட்ட காலத்தில் எந்தெந்த நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத பரிமாற்றங்கள் அனுமதிக்கப்படும் என்பது குறித்த விரிவான பட்டியலை, இந்திய மியூச்சுவல் பண்டு சங்கமான ‘ஆம்பி’ விரை வில் வெளியிடும்
முதலீட்டாளர்கள் துவக்கத்தில், ‘எம்.எப்., சென்ட்ரல் தளம்’ வாயிலாக ஆர்.டி.ஏ.,க்களிடம் இந்த வசதியை பெறலாம். சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் வைத்துள்ள முதலீட்டாளர்கள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்
அனைத்து மியூச்சுவல் பண்டு நிறுவனங்களும் தங்களின் இணையதளங்களில் இந்த லாக் செய்யும் வசதி குறித்த விரிவான தகவல்களை பதிவேற்ற வேண்டும்.
