முதல்வர் ரேகா குப்தா, நிருபர்களிடம் கூறியதாவது:
டில்லியில் வீட்டு உபயோக மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை. மக்கள் பீதி அடைய வேண்டாம். அதேபோல், காஸ் ஏஜென்ஸி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம்.
காஸ் சிலிண்டர் கிடங்குகளுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். தடையின்றி உரிய காலத்துக்குள் காஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
விதிமுறைகளை மீறி காஸ் சிலிண்டர்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 3ம் தேதி ஒரு லட்சத்து 11,504- பேர் வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்பதிவு செய்துள்ளனர். மூன்று எண்ணெய் நிறுவனங்கள் ஒரு 26,379 சிலிண்டர்களை வினியோகம் செய்து ஏற்கனவே இருந்த முன்பதிவு நிலுவையை முடித்துள்ளது.
டில்லியில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களுக்கான சராசரி வினியோகம் நான்கு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து நான்கு நாளில் வீட்டுக்கே காஸ் சிலிண்டர் வரும். எனவே, வதந்தியை நம்பி, ஏஜென்ஸி வாசலில் காத்திருக்க வேண்டாம்.
சட்டவிரோதமாக காஸ் சிலிண்டர்களை பதுக்குவோரை ஒழிக்க, டில்லி மாநகரப் போலீஸ் 22 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. சட்டவிரோதமாக காஸ் சிலிண்டர் விற்போர் குறித்து, 011- – 2337 9836 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
