முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு: வேட்புமனுவில் தகவல்

சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு ரூ.3.3 கோடி மதிப்பு அசையும் சொத்தும், ரூ.2.95 கோடி மதிப்பு அசையா சொத்தும் உள்ளது தெரியவந்துள்ளது.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஸ்டாலின் இன்று மார்ச் 30ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். அத்துடன் தனது சொத்து மதிப்பு குறித்த விவரங்களையும் தெரிவித்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஸ்டாலின்

2020- 21 நிதியாண்டில் ரூ.27.34 லட்சம்

2021-22 நிதியாண்டில் ரூ.20.93 லட்சம்

2022 – 23 ம் நிதியாண்டில் ரூ.66.40 லட்சம்

2023 -24 ம் நிதியாண்டில் ரூ.30.59 லட்சம்

2024 – 2025ம் நிதியாண்டில் ரூ.30.94 லட்சம் வருமான வரி செலுத்தி உள்ளார்.

மனைவி துர்கா

2020 – 21 நிதியாண்டில் ரூ.5.10 லட்சம்

2021- 22 ம் நிதியாண்டில் ரூ.5.10 லட்சம்

2022- 23 ம் நிதியாண்டில் ரூ. 5.30 லட்சம்

2023- 24 ம் நிதியாண்டில் ரூ.5.39 லட்சம்

2024- 25ம் நிதியாண்டில் ரூ.5.33 லட்சம் வருமானவரி செலுத்தி உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை.

கையிருப்பு

முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.10 ஆயிரமும்

துர்காவிடம் ரூ.40 ஆயிரமும் ரொக்கம் கையிருப்பாக உள்ளது.

வங்கிக்கணக்கு விபரம்

முதல்வர் ஸ்டாலினுக்கு ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக் கிளையில், 8 நிரந்தர வைப்புக்கணக்கு உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மகாலிங்கபுரம் கிளை சேமிப்பு கணக்கில் ரூ.64,943 உள்ளது.தேர்தல் செலவுக்காக டிடிகே சாலை மெர்க்கன்டைல் வங்கி கிளையில் ரூ.10 லட்சம் உள்ளது.

துர்கா பெயரில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடுமெர்க்கன்டைல் வங்கி கிளை சேமிப்பு கணக்கில் ரூ.47.75 லட்சம் உள்ளது.

ஸ்டாலினிடம் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் ஏதுமில்லை

துர்காவிடம் ரூ.84.52 லட்சம் மதிப்புள்ள 720 கிராம் தங்க நகை உள்ளது.

ஸ்டாலினின் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.3.30 கோடி

துர்காவின் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.1.32 கோடி

அசையா சொத்து விவரம்

ஸ்டாலினுக்கு அஞ்சுகம் குடும்ப அறக்கட்டளையில் 1.13 லட்சம் மதிப்புள்ள 12.5 சதவீத பங்குகள் உள்ளன.தயாளு குடும்ப அறக்கட்டளையில் மூன்றில் ஒரு பங்கு உள்ளது. இந்த அறக்கட்டளைக்கு மதுரை மாடக்குளம் கிராமத்தில் 21 சென்ட் காலிமனை உள்ளது. இதன் மதிப்பு ரூ.47.26 லட்சம் ஆகும்.ஸ்டாலினுக்கு தஞ்சை மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் 2.86 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

விவசாயம் அல்லாத நிலங்கள்

ஸ்டாலினுக்கு திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் 52,732 சதுர அடி அளவுக்கு விவசாயம் அல்லாத நிலம் உள்ளன.துர்காவுக்கு திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கம் கிராமத்தில் 3,680 சதுர அடி நிலமும்நாகை மாவட்டம் திருவெண்காடு கிராமத்தில் 1140 சதுர அடியில் நிலம் உள்ளது

குடியிருப்பு கட்டடம்

ஸ்டாலினுக்கு சென்னை வேளச்சேரி சீதாபதி நகரில் 2,687 சதுர அடியில் ( மனைவிக்கு 50 சதவீத பங்கு) , திருவாரூரின் கீழ் சன்னதி தெருவிலும் குடியிருப்பு உள்ளது.துர்காவுக்கு சென்னை வேளச்சேரியில் சீதாபதி நகரில் 2,687 சதுர அடியிலும் (கணவருக்கு 50 சதவீத பங்கு) , நாகை மாவட்டம் திருவெண்காடு கிராமத்தில் 5,942 சதுர அடி குடியிருப்பு உள்ளது.

அசையா சொத்தின் மொத்த மதிப்பு

முதல்வர் ஸ்டாலின் – ரூ.2.95 கோடி

துர்கா- ரூ.2.10 கோடி.

முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஆகியோரிடம் வாகனங்கள் எதுவும் இல்லை.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது வேட்புமனுவில் கூறியுள்ளார்.

Source link