அசாம் மாநிலத்தின் 126 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 9 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கனவே ஆட்சியில் உள்ள பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இதற்கிடையே அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா மனைவி குறித்த சர்ச்சை பூதாகரமாக வெடித்து வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் பவன் கேரா, கௌரவ் கோகோய் அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்து சில ஆவணங்களை வெளியிட்டனர்.
அதில்,”அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயன் சர்மா, இந்தியா தவிர ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார். துபாய் கோல்டன் விசா வைத்திருக்கிறார்.
