சென்னை,
முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் (29-ம் தேதி) காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கனமழையால் ஏற்பட்டுள்ள தற்போதைய பாதிப்புகள், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சர்களிடம் முதல்-அமைச்சர் கேட்டறியவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன.
மேலும், நிர்வாக ரீதியான முடிவுகளை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்சினை, விலைவாசி உயர்வு, அமைச்சரவை மாற்றம் அல்லது மாநிலத்தில் முக்கிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
