கடந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர் தங்களது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அதனைத் தொடர்ந்து தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
இந்த சூழலில் இவர்களை தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதுபோல முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தனது கரூர் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பின்னர், இருவரும் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
மொத்தம் ஆறு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழ்நாடு முதல்வர் விஜய், தனது திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இந்த சூழலில் காலியாக இருந்த ஏழு தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெற்றதில், தவெக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.-க்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதில் இரண்டு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களான சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இந்த சூழலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் இனி வர இருக்கும் மீதமுள்ள ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
மூன்றாம் இடத்தில் இருந்து இரண்டாம் இடம்
கடந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக இரண்டாம் இடம் பெற்றது. ஆனால் மே மாதம் நடைபெற்ற தேர்தலின்போது, திமுக மூன்றாம் இடம் பெற்றிருந்தது என்பதும், இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவை விட அதிக வாக்குகள் பெற்று, தனது இருப்பை நிலைநிறுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த முறை வெற்றிதான் இலக்கு?
இனி வரும் இடைத்தேர்தல்களில் வெற்றிதான் இலக்கு என ஸ்டாலின் நிர்வாகிகளிடம் கறாராக கூறியுள்ளாராம். இதற்கான வேலைகளை கடந்த இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் முதலே பிளான் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
