முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை: மார்க்சிஸ்ட் தேர்தல் அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சமாக, மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் காலக்கெடு நிர்ணயித்தல், பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்குதல் மற்றும் அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நன்கொடை பெறுவதைத் தடை செய்தல் போன்ற அதிரடி மாற்றங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. தென்மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையை குறைக்கும் தொகுதி மறுவரையறைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துத் துறைகளிலும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.26 ஆயிரம், 100 நாள் வேலைத் திட்டக் கூலியை ரூ.700 ஆக உயர்த்தி 200 நாட்களாக விரிவாக்குதல் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் போன்றவற்றுக்கு தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதல் விலை வழங்க மத்திய அரசை வலியுறுத்தவும், கோயில் மற்றும் வக்பு நிலங்களில் வசிப்போருக்குப் பட்டா வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Source link