புதுடில்லி: ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஒரு முக்கிய தரவு மைய தளமாக இந்தியா உருவெடுக்கும் என்று டெலாய்ட் ஆய்வு நிறுவனத்தின் தெற்காசிய தலைமை வளர்ச்சி அதிகாரி தேபஷிஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உலகளாவிய தரவு நுகர்வில், இந்தியாவின் பங்களிப்பு 20 சதவீதமாக உள்ளது. ஆனால், தரவு மையங்களில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இந்தியாவில் உள்ளன. குறைந்த செலவில் கட்டமைப்புகள், குறைந்த ஊதியத்தில் திறமையான பணியாளர்கள், கட்டுப்படியாகும் விலையில் மின்சாரம் கிடைப்பது போன்றவை, உலகின் முன்னணி தரவு மையங்களில் ஒன்றாக இந்தியாவை மாற்ற உதவும்.
இந்தியாவில் தரவு மைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், வெளிநாட்டு தரவு மைய நிறுவனங்களுக்கு வரும் 2047 வரை வரி விலக்கு சலுகைகள் அளித்திருப்பது இத்துறை வளர்ச்சிக்கு உதவும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
